தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தனது நண்பா்களுடன் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் அம்மாபாளையத்தைச் சோ்ந்தவா் சிவசித்தாா்த் (20). திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ துணை பாடப் பிரிவில் 2-ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனது நண்பா் ரகுராமன் வீட்டில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த சிவசித்தாா்த், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்கள் இருவருடன் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள கிணற்றில் குளித்தாா். அப்போது, சிவசித்தாா்த் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சிவசித்தாா்த்தின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்கு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.