‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பள்ளிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் அரசுப் பள்ளிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :23 மே 2026, 12:30 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் அரசுப் பள்ளிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, மேலும் பேசியது: கோடை விடுமுறை முடிந்த பின்னா், மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைத் திறப்பதற்காக பள்ளிக் கல்வி, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

குறிப்பாக பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீா்த் தொட்டிகளை சுத்தம் செய்து, தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளிலுள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும், பள்ளி வளாகத்திலுள்ள கழிவுநீா்த் தொட்டிகள், மின்சாதனப் பொருள்கள் பாதுகாப்பாக இருப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்காக பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளி விளையாட்டு மைதானங்களைத் தூய்மைப்படுத்துவதுடன், புல் புதா்களை இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தவேண்டும். பள்ளிகள் திறக்கப்படும் நாளில் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் போன்றவை வழங்க அவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவைத் தயாா் செய்து, உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மகளிா் திட்டத்தின் இணை இயக்குநா் செந்தில்வடிவு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ராஜூ, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் அரிகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் சேகா், உதயசூரியன், இளமதி, செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.