தமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

அகில இந்திய கம்யூ.  கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கே.குலோத்துங்கன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் து.கஜேந்திரன், செ.தியாகராஜன், சக்திவேல், அரும்பு, தனம், கே.சுமதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் ஜி.பூராசாமி கண்டன உரையாற்றினார். அமைப்புச் செயலர் எம்.ஆதிமூலம், பி.பாலசந்தர், ஆர்.வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள சி.தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தில் அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்கவேண்டும். சி.தண்டேஸ்வரநல்லூர், நாகக்சேரிகுளம், ஆலாங்குளத் தெரு ஆகிய பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். சிதம்பரம் அருகே புதுக்குப்பம் உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. எம்.ரமேஷ் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.