என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து, வாணாதிராயபுரம் கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம் தனது 3-ஆவது சுரங்கத்தை விருத்தாசலம், புவனகிரி பகுதிகளில் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக, வீடு, நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த 11-ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள், என்எல்சி விரிவாக்கத்துக்கு தங்களது வீடு, நிலங்களை வழங்க மாட்டோம் எனக் கூறினர். இதுதொடர்பாக, நெய்வேலி, புவனகிரி, விருத்தாசலம் பகுதிகளில் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நெய்வேலி, சுரங்கம் 1ஏ அருகே உள்ள வாணாதிராயபுரம் கிராம மக்கள் என்எல்சி நிறுவனத்துக்கு தங்களது நிலங்களை தர மறுத்து, அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தங்களது கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் முறைகேடு! சட்ட அதிகாரமில்லா விசாரணைக் குழு என கேஜரிவால் குற்றச்சாட்டு!

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |


