விருத்தாசலம் அருகே இரண்டு கோயில்களில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது.
விருத்தாசலம் அருகே சு.கீணனூரில் மாரியம்மன் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை இந்தக் கோயிலுக்கு வந்தவர்கள், கோயில் தகவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். கோயிலின் உள்ளேச் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்ததோடு, அம்மன் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தாலிச் செயினும் திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து கம்மாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: இதேபோல, விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அதில், சுமார் ரூ.10 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், அருகிலுள்ள பெருமாள் கோயிலிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







