என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

அனுமதி பெறாத மனைகளை வரன்முறைப்படுத்த நவ.3 வரை கால அவகாசம் நீட்டிப்பு

வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கடலூர் நகராட்சி ஆணையர் க.சரவணன் தெரிவித்தார்.

Updated On :23 ஜூலை 2018, 9:19 am IST

வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கடலூர் நகராட்சி ஆணையர் க.சரவணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் பெருநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 
வசிப்பவர்கள் கட்டடங்கள் கட்ட நகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதியின்றி பலரும் கட்டடங்கள் கட்டியுள்ளனர். அனுமதியில்லா மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளுக்கு மனை முறைப்படுத்துதல் அனுமதி பெற்றுக்கொள்ள அரசு மே 3-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் தற்போது நவம்பர் மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சிப் பகுதியில் உள்ள 45 வார்களிலும் 198 அனுமதியற்ற மனைப் பிரிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 20.10.2015-க்கு முன் உருவான அனுமதி பெறாத மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை கிரையம் செய்துள்ளவர்கள் மட்டும் இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதி பெறலாம். மேற்படி தேதிக்குள் கிரையம் பெற்ற தனிமனை உரிமையாளர்கள் மற்றும் மனைப்பிரிவு உரிமையாளர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ப்ஹஹ்ர்ன்ற்ழ்ங்ஞ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மனைப் பிரிவு வரைபடம், பத்திர நகல், டிஎஸ்எல்ஆர் நகல் மற்றும் வில்லங்கச் சான்றுடன் விண்ணப்பம் செய்து அனுமதி பெறலாம். 
அனுமதி பெறாத மனைப் பிரிவுகளில் உள்ள மனைகளை முறைப்படுத்தாவிட்டால், கட்டடம் கட்ட வரைபட அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சாலை வசதி மற்றும் புதை சாக்கடை இணைப்பு வசதிகள் நகராட்சியால் செய்துத் தர இயலாது. எனவே, மனைகளை முறைப்படுத்த அனுமதி பெறாதவர்கள் உடனே அனுமதி பெற விண்ணப்பிக்கலாம். மேலும், அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்துதல் தொடர்பான முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.