சிதம்பரத்தில் 10-ஆவது திருப்புகழ் மாநாடு வருகிற 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கீழப்புதுத்தெரு வேதபாராயண மடத்தில் நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு என்.கோவிந்தராஜன் தலைமை வகிக்கிறார். வி.சந்திரசேகர் வரவேற்கிறார். பேராசிரியர் தி.பொன்னம்பலம், கனகசபை மேலும் எனது குருநாதன் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
சீர்காழி சகோதரிகள் ஆர்.அருணா, ஆர்.அகிலா ஆகியோர் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.
திருப்புகழின் பெருமை குறித்து கே.அருள்பிரகாசம் சொற்பொழிவாற்றுகிறார். பேராசிரியர் மு.சிவச்சந்திரன், "திருப்புகழில் அறம்' என்ற தலைப்பிலும், த.அகரமுதல்வர் சுந்தர், "அலங்காரம்' என்ற தலைப்பிலும், "தமிழ்ப்பெருமாள்' என்ற தலைப்பில் ரா.அன்பழகன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
ஸ்ரீமௌனமட அதிபர் மௌனசுந்தரமூர்த்தி சுவாமிகள், விலங்கல்பட்டு முருகப்பா, பண்ருட்டி பி.டி.மாதவன் ஆகியோர் ஆசியுரை வழங்குகின்றனர். விலங்கல்பட்டு எஸ்.வைத்தியநாதசாமி, திருப்புகழ் மகளிர் மன்றக் குழுவினரின் திருப்புகழ் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
விழாவில் ஹைதராபாத் வி.கணேஷ், கடலூர் கே.கணேஷ், எஸ்.குமாரசாமி, கே.வைத்தியநாதன், பா.நடராஜன், அநுபூதி அறக்கட்டளை வி.முருகையன், என்.முருகன்பிள்ளை, எஸ்.செல்வமுத்துக்குமரன், எஸ்.ஆர்.ராமநாதன் செட்டியார், ராம.முத்துக்குமரேசன் ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர். டி.அனந்தபத்மநாபன் நன்றி கூறுகிறார்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை விலங்கல்பட்டு எஸ்.வைத்தியநாதசாமி,
ஜே.ராகவன் மற்றும் நிர்வாகிகள்
செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் முறைகேடு! சட்ட அதிகாரமில்லா விசாரணைக் குழு என கேஜரிவால் குற்றச்சாட்டு!

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |


