உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

கல்லூரி மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில்  உள்ள தனியார் மகளிர் கல்லூரியில்  மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில்  உள்ள தனியார் மகளிர் கல்லூரியில்  மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம் என வலியுறுத்தியும், கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும், ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும், அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விடுதி மாணவர்களுக்கான உணவுப் படியை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் தழுவிய வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்தது.  அதன்படி,கடலூரில்  உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் கல்லூரியில் புதன்கிழமை இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் கே.செம்மலர் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் என்.நந்தினி, அருந்ததி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.