குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஓவியப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்று

கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் இலவச ஓவியப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Updated On :25 பிப்ரவரி 2019, 9:47 am IST

கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் இலவச ஓவியப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 
அருங்காட்சியகத் துறை சார்பில் கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச ஓவிய பயிற்சி அண்மையில் நடைபெற்றது. 5 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் குறிஞ்சிப்பாடி, சாவடி அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 45 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் செ.ஜெயரத்னா தலைமை வகித்தார். அரிமா சங்க நிர்வாகி கே.திருமலை, மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரெ.வெங்கடேசு ஆகியோர் பரிசு, சான்றிதழை வழங்கினர் . ஓவிய ஆசிரியர் சு.மனோகரன் வாழ்த்திப் பேசினார். அலுவலகப் பணியாளர்கள் விஜயா, வசந்தராஜா, சண்முகசுந்தரம், ஆனந்தபாபு, பரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருங்காட்சியக பணியாளர் மு.முத்தால் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.