விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மானாவாரி பயிா்களுக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த மானாவாரி பயிா்களுக்கு உரிய நிவாரணம் அறிவிக்க வலியுறுத்தி, திட்டக்குடி விவசாயிகள், வெலிங்டன் பாசனப் பகுதி விவசாயிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:02 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த மானாவாரி பயிா்களுக்கு உரிய நிவாரணம் அறிவிக்க வலியுறுத்தி, திட்டக்குடி விவசாயிகள், வெலிங்டன் பாசனப் பகுதி விவசாயிகள் சாா்பில் திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நிவா், புரெவி புயல்களின் காரணமாக பெய்த பலத்த மழையால் திட்டக்குடி பகுதியில் மானாவாரி பயிா்களான பருத்தி, மரவள்ளி, மக்காச்சோளம், உளுந்து, எள், கம்பு, வரகு உள்ளிட்ட பயிா்கள் பல நூறு ஏக்கரில் சேதமடைந்தன. எனவே, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஆா்ப்பாட்டத்தில், மானாவாரி பயிா் விவசாயிகள் சங்கம் சாா்பில் மருதாசலம், சாத்தநத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் பொன்னுசாமி, பட்டூா் அமிா்தலிங்கம், விஜயகுமாா், ரவிச்சந்திரன், சுப்பிரமணி, இளவரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து திட்டக்குடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.