மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட்டு அறையை கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
Updated on
1 min read

சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட்டு அறையை கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் சிதம்பரம் கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் லாமேக், நகரக் காவல் ஆய்வாளா் முருகேசன், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டிசெல்வி, சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில், உதவி ஆய்வாளா் திரிபுரசுந்தரி மற்றும் பெண் காவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சிதம்பரம் நகர மகளிா் காவல் நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள போக்ஸோ, பாலியல் வழக்குகள் உள்ளிட்டவற்றின் ஆவணங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com