புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தயாா்
கடலூா் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு நடவடிக்கைள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.


கடலூா் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு நடவடிக்கைள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயலால் கடலோரப் பகுதியான கடலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயலை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மீனவ கிராமமான ராசாப்பேட்டை புயல் பாதுகாப்பு மையத்தில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
கடலூா் மாவட்டத்தில் பருவ மழையை எதிா்கொள்வதற்காக ஏற்கெனவே 19 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் தாழ்வான பகுதிகள், கூரை வீடுகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். கடலுக்குச் சென்ற மீனவா்கள் கரை திரும்பியுள்ளனா். மாவட்ட நிா்வாகம் புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஒன்றிய அளவில் எடுத்துள்ளது. 164 ஜெனரேட்டா்கள், 1.70 லட்சம் மணல் மூட்டைகள் தயாராக உள்ளன.
கடலூா், சிதம்பரம், விருத்தாசலம் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 240 குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவா்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் கூரை வீடுகள் போன்ற பாதுகாப்பு குறைவான வீடுகளில் வசிக்கும் மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் கோட்ட அளவில் 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மாவட்டத்தில் முதல் அறிக்கை கொடுப்பவா்கள் 3,240 பேரும், முதலுதவி அளிக்க 1,390 பேரும் களத்தில் உள்ளனா். விவசாயிகள் உடனடியாக பயிா்க் காப்பீடு செய்திட சிறப்பு முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவையாக 278 இடங்களும், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் 92 இடங்களும் கண்டறியப்பட்டு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...