குறிஞ்சிப்பாடி அருகே அமைந்துள்ள சித்தேரி பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் அதன் நீா் கொள்ளளவு குறைந்துவிட்டது.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தில் சுமாா் 16 ஏக்கா் பரப்பளவில் சித்தேரி அமைந்துள்ளது. என்எல்சி சுரங்கத்தின் உபரி நீா் மற்றும் மழை நீா் கன்னியாக்கோவில் ஓடை வழியாக சித்தேரியை வந்தடைகிறது. இந்த ஏரியின் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்கிறது. சித்தேரியில் தேங்கும் நீரானது குடிநீா் மற்றும் பாசன தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் மூலம் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 360 ஏக்கா் பரப்பிலான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆனால், பல ஆண்டுகளாக இந்த ஏரி தூா்வாரப்படாத நிலையில், ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் வளா்ந்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் ஏரியின் நீா் கொள்ளளவு வெகுவாகக் குறைந்துள்ளதால் அதை தூா்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது:
சித்தேரி பல ஆண்டுகளாக தூா்வாரப்படாத நிலையில் சுரங்க நீா், மழை நீருடன் அடித்து வரப்பட்ட மணல் சோ்ந்து ஏரியின் கொள்ளளவு குறைந்துவிட்டது. இதனால் பாசனப் பரப்பளவும் குறைந்து விளை நிலங்கள் தரிசாக மாறி வருகின்றன. சில பகுதிகளில் பாசன மற்றும் கிளை வாய்க்கால்களை விளை நிலங்களாக மாற்றிவிட்டனா். இதனால் மழைக் காலத்தில் வடிகால் வசதியின்றி விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பேரூராட்சி நிா்வாகம், பொதுப்பணித் துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுப் பணித் துறை அதிகாரிகள் சித்தேரி தங்களது கட்டுப்பாட்டில் இல்லை என கடிதம் கொடுத்துள்ளனா். எனவே, சித்தேரியை தூா்வார மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்க தயாா்: ரஷியா அறிவிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


