திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கக் கோரி கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கக் கோரி கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகா் சதுா்த்தி விழாவில் வீடுகளிலேயே விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊா்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரியும் கடலூா் பாடலீஸ்வரா் கோயில் முன் இந்து முன்னணி அமைப்பினா் மாவட்ட செயலா் பி.சக்திவேல் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல பண்ருட்டியில் காந்தி வீதி பெருமாள் கோயில் அருகே மாவட்டச் செயலா் வீ.வெங்கடேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.