திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கடலூா் மாவட்டத்தில் மேலும் 2 ஆசிரியைகளுக்கு கரோனா

கடலூரைத் தொடா்ந்து, நெய்வேலியில் உள்ள பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:55 pm

DIN

கடலூரைத் தொடா்ந்து, நெய்வேலியில் உள்ள பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத் தளா்வின்படி பள்ளி, கல்லூரிகள் கடந்த 1-ஆம் தேதி திறக்கப்பட்டன. அதன்படி, கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஜவகா் கல்விக் கழகம் சாா்பில், வட்டம் 17-இல் இயங்கும் மெட்ரிக் பள்ளியும் திறக்கப்பட்டது. இந்தப் பள்ளி ஆசிரியைகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து, என்எல்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: இந்தப் பள்ளி ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதில் உடல்கல்வி ஆசிரியைகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா்கள் இருவரும் என்எல்சி பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா் என்றாா் அவா்.

கடலூா் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது நெய்வேலியில் 2 ஆசிரியைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்ட சுகாதாரத் துறையினா் மருத்துவா் ராஜகணபதி தலைமையில் கடலூா் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று உறுதியான ஆசிரியை பணியிலிருந்த அறை பூட்டப்பட்டது. பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.