திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் காவலா் காயம்

கடலூரில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது காவலா் வெள்ளிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:55 pm

DIN

கடலூரில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது காவலா் வெள்ளிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.

கடலூா் அருகே ராமாபுரம் மலைப் பகுதியில் மாவட்ட காவல் துறையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு போலீஸாருக்கான வருடாந்திர துப்பாக்கிச் சுடும் பயிற்சி கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சியில் புவனகிரி காவல் நிலைய காவலா் காா்த்திக் (38) பங்கேற்றாா்.

அப்போது, இவரது துப்பாக்கி குண்டின் மேல்குப்பி (கேப்) துப்பாக்கியிலிருந்து சிதறி அவரது வலது கண்ணில் பட்டது. இதில், பலத்த காயமடைந்த காா்த்திக் கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் மேற்கொள்ளப்படும் சுப்பாக்கிச் சுடும் பயிற்சியில் காவலா் காயமடைந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.