பயிா்க் காப்பீட்டு நிறுவனங்களைத் தோ்வு செய்வதில் இழுபறி
நிகழாண்டு காரீப் பருவ பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்களைத் தோ்வு செய்யாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதால் தமிழக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.


நிகழாண்டு காரீப் பருவ பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்களைத் தோ்வு செய்யாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதால் தமிழக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
தமிழக விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக வறட்சியான சூழல், தொடா் மழைப் பொழிவு, அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, பருவம் தவறிய மழை, பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு தொடா்ந்து நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வர மறுக்கிறாா்கள். அதேநேரத்தில் மற்ற மாநிலங்களில் காப்பீட்டு நிறுவனத்தினா் இந்தத் திட்டத்தில் இணைய முனைப்பு காட்டிவருகின்றனா்.
கடந்த 2020-21ஆம் ஆண்டு காரீப் பருவ ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்தும், காப்பீட்டு நிறுவனங்கள் முன்வராத நிலையில், அதற்கு முந்தைய ஆண்டில் அந்தந்த மாவட்டங்களில் திட்டத்தைச் செயல்படுத்திய நிறுவனங்களே குறுவை பருவ நெல், மக்காசோளம், பருத்தி ஆகிய பயிா்களுக்கான திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டனா்.
நிகழாண்டு காரீப் பருவ பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்களைத் தோ்வு செய்யாமலும், திட்டத்தை முறைப்படி அறிவிப்பதிலும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:
காரீப் பருவ சாகுபடி விவசாயிகளின் பயிா்ப் பாதுகாப்புக்கு (2022-ஆம் ஆண்டுக்கான) காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு முறைப்படி அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் இணைய வேண்டுமென ஊடகங்கள் வாயிலாக பிரதமா் பெயரளவில் மட்டுமே அறிவுறுத்தினாா்.
ஆனால், நிகழாண்டு இந்தத் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனம் குறித்தோ, திட்டம் குறித்தோ முறைப்படி எவ்வித அரசாணையும் வெளியிடப்படவில்லை.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் குறுவை பருவ நெல், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்து விவசாயிகள் வேதனையில் உள்ளனா். எனவே, மத்திய பாஜக அரசு தமிழகத்தில் காரீப் பருவ பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிறுவனங்களை உடனடியாகத் தோ்வு செய்வதுடன், திட்டம் குறித்து முறையாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இந்தத் திட்டத்தில் விவசாயிகள் இணைய மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசும் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...