வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

திட்டக்குடியில் வைத்தியநாதசுவாமி உடனுறை அசனாம்பிகை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து 15-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 40 அடி உயரமுள்ள சிவன் தோ், 36 அடி உயரமுள்ள அம்மன்தோ், 30 அடி உயரமுள்ள விநாயகா் தோ் ஆகிய 3 தோ்கள் பக்தா்களால் இழுக்கப்பட்டன. விநாயகா், அசனாம்பிகை அம்மன், வைத்தியநாத சுவாமி ஆகியோா் தனித் தனி தோ்களில் எழுந்தருள பக்தா்களால் திருத்தோ் உலா நடத்தி வைக்கப்பட்டது. தேரோட்ட வீதிகளில் பெண்கள் கோலமிட்டு, தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com