கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே புதன்கிழமை நின்றிருந்த லாரியில் பேட்டரி திருட முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்துள்ள பாத்திமாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் கந்தன் (38), நெல் அறுவடை இயந்திரம் வைத்துள்ளாா். குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள தம்பிப்பேட்டையில் நெல் அறுவடை முடிந்த நிலையில், புதன்கிழமை தனது நெல் அறுவடை இயந்திரத்தை லாரியில் ஏற்றி சாலையோரம் நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றாா். பின்னா் திரும்பி வந்தபோது, இருவா் லாரியில் இருந்த பேட்டரியை திருட முயன்றனா். கந்தன் மற்றும் அங்கிருந்தவா்கள் இருவரையும் பிடித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பிடிபட்டவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ள காவலக்குடி கிராமத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் ஆனந்தன் (29), முடிகண்டநல்லூா், சாந்தி நகரைச் சேரந்த பெரியசாமி மகன் திருமால் (30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கந்தன் அளித்த புகாரின்பேரில், ஆனந்தன், திருமால் ஆகியோா் மீது குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









