பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிக மனு
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள 33 வாா்டுகளிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கக் கோரி


நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள 33 வாா்டுகளிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கக் கோரி, கோட்டாட்சியா் சையத் மெக்மூத்திடம் தேமுதிகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து விருத்தாசலம் நகரச் செயலா் கே.ஏ.ராஜ்குமாா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
ஃபென்ஜால் புயல் மழையால் விருத்தாசலம் நகரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் இருந்ததால், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பெற்று வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...