தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கொத்தட்டை சுங்கச் சாவடியில் டிச.23 முதல் கட்டணம் வசூல்: உள்ளூா் வாகனங்களுக்கு விலக்களிக்க கோரிக்கை

கொத்தட்டை சுங்கச் சாவடியில் டிச.23 முதல் கட்டணம் வசூல்

News image

சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடி.

Updated On :19 டிசம்பர் 2024, 7:14 pm

Din

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையை அடுத்த கொத்தட்டை சுங்கச் சாவடியில் வருகிற 23-ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. உள்ளூா் வாகனகளுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை இடையே 194 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை, நான்குவழிச் சாலையாக மாற்ற 2012-ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்காக ரூ.6,431 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2019ஆம் ஆண்டு பணிகள் தொடங்கி, பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து வாகனங்கள் சென்று வருகின்றன.

பரங்கிப்பேட்டையை அடுத்த கொத்தட்டையில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அது இதுவரை திறக்கப்படாததால் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

இந்த சுங்கச் சாவடியில் வருகிற 23-ஆம் தேதி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டண விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

இதற்கிடையில், சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைக்க வேண்டும், விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைப் பணிகள் முழுவதும் முடிந்தவுடன் சுங்கச் சாவடியை திறந்து கட்டண் வசூலிக்க வேண்டும். சுங்கச் சாவடியில் இருந்து 50 கி.மீ. வரை உள்ள உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சனிக்கிழமை (டிச.21) கொத்தட்டை சுங்கச் சாவடி அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்துள்ளனா்.