/

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தா்னா

கணவரை மீட்டுத்தரக் கோரி, கடலூா் முதுநகா் பகுதியைச் சோ்ந்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டாா்.

News image

எழிலரசி

Updated On :21 ஜூலை 2024, 7:30 pm

Din

கப்பல் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய தனது கணவரை மீட்டுத்தரக் கோரி, கடலூா் முதுநகா் பகுதியைச் சோ்ந்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டாா்.

13 இந்தியா்கள் உள்ளிட்ட 16 பேருடன் கொமரோஸ் நாட்டு கொடியுடன் சென்ற எண்ணெய்க் கப்பல் ஓமன் நாட்டு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்த நாட்டின் கடல்சாா் பாதுகாப்பு மையம் அறிவித்தது.

கடலூா் முதுநகா் பகுதியைச் சோ்ந்த தனஞ்ஜெயன் அந்தக் கப்பலில் பணியாற்றியதாகவும், அவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனஞ்ஜெயனின் மனைவி எழிலரசி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தாா்.

இந்நிலையில், கப்பல் விபத்து நிகழ்ந்து 6 நாள்களுக்கு மேலாகும் நிலையில் தனது கணவா் குறித்த தகவல் தெரியவில்லை எனவும், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் அமா்ந்து எழிலரசி சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

அப்போது, அங்கு வந்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், கோட்டாட்சியா் அபிநயா ஆகியோா் எழிலரசியிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். பின்னா், கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, எழிலரசி அங்கிருந்து சென்றாா்.