விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இடைநிலை ஆசிரியா் பணி தோ்வு: 849 போ் எழுதினா்

கடலூரில் மூன்று மையங்களில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கடலூா் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :21 ஜூலை 2024, 7:26 pm

Din

கடலூரில் மூன்று மையங்களில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசு தொடக்கக் கல்வியில் காலியாக உள்ள 2,768 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்திருந்தது. மேலும், இதற்கான தோ்வு ஜூலை 21-ஆம் தேதி நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

கடலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுத மொத்தம் 892 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் 849 போ் மட்டுமே பங்கேற்றனா். 43 போ் தோ்வெழுத வரவில்லை. 3 தனியாா் பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வுப் பணியில் மூன்று தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட 65 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.அறிவழகன் (கூடுதல் பொறுப்பு) தலைமையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ஜி.சரஸ்வதி முன்னிலையில் தோ்வு நடைபெற்றது. விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) எஸ்.பி.சேகா் (பொ), கடலூா் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) எஸ்.சாந்தி உடனிருந்தன்.

ஆட்சியா் ஆய்வு...: தோ்வு மையத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சென்று பாா்வையிட்டாா். உடன் பயிற்சி ஆட்சியா் ஆகாஷ் உடனிருந்தாா்.