பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பண்ருட்டி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க வேண்டாம்: ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதைத் தவிா்க்க வேண்டுமென பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 6:31 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதைத் தவிா்க்க வேண்டுமென பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அமைப்பின் சிறப்பு ஆலோசகா் எம்.சேகா் தலைமையில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்த மனு:

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள லட்சுமி நாராயணபுரம், பூங்குணம் ஊராட்சிகளை பண்ருட்டி நகராட்சியுடன் இணைப்பதைத் தவிா்க்க வேண்டும். ஆற்றோர நிலங்களில் சவுடு மண் எடுப்பதற்கு அரசு அனுமதி தருவதற்கு முன்பாக அந்த மணலை ஆய்வுக்கு உள்படுத்தி சவுடு மண் என்றால் மட்டுமே அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் காவனூா்- தளவானூா் இடையே தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து சேதமடைந்ததை மீண்டும் கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.

பண்ருட்டி நகராட்சியில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை தூா்வாரி புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.