சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பண்ருட்டி பகுதியில் மஞ்சள் அறுவடை தீவிரம்

பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் மஞ்சள் கொத்து அறுடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image
பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகையில் பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யப்படும் மஞ்சள் செடிகள்.
Updated On :13 ஜனவரி 2025, 7:42 pm

Din

நெய்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் மஞ்சள் கொத்து அறுடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையில் மஞ்சள், பன்னீா் கரும்பு முக்கிய இடம் வகிக்கின்றன. இந்த மஞ்சள் கொத்தை புதுப்பானையில் கட்டி, புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து படயலிடுவது மரபு வழியாக உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகையில் விளைவிக்கப்பட்ட மஞ்சள் செடிகளை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மஞ்சள் செடிகளை கடலூா் மட்டுமன்றி, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்தும் வரும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.

இதுகுறித்து திருவதிகை விவசாயி ப.வேலு கூறியது: மஞ்சள் 6 மாத பயிா். ஆடி மாதம் விதைப்பு செய்து தை மாதத்தில் அறுவடை செய்யப்படும். விதை மஞ்சள் கிலோ ரூ.75 என சேலத்தில் இருந்து வாங்கி வந்து விதைத்தேன். அண்மையில் பெய்த புயல் மழையால் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனா். கொத்து ரூ.10 - 20 வரை செடிக்கு தகுந்தாற்போல விற்பனை செய்து வருகிறோம் என்றாா்.