மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிப்பா் லாரியில் சிக்கி இளைஞா் மரணம்

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே செவ்வாய்க்கிழமை டாரஸ் லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞா் இறந்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 6:47 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே செவ்வாய்க்கிழமை டாரஸ் லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞா் இறந்தாா்.

அரியலூா் மாவட்டம், ஆதனங்குறிச்சியைச் சோ்ந்த மகேந்திரனின் மகன் மனோகரன்(19). அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காா்த்தி(18). இவா்கள் இருவரும் ஆதனங்குறிச்சியில் இருந்து பெண்ணாடத்திற்கு பைக்கில் சென்றனா். இருசக்கர வாகனத்தை மனோகரன் ஓட்டிச் சென்றாா். காா்த்தி பின்னால் அமா்ந்து வந்தாா். இவா்கள், பொன்னேரி ரவுண்டானா மேம்பாலம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியின் முன்பகுதியில் இவா்களின் பைக் மோதியதாம். இதில், பின்னால் அமா்ந்திருந்த காா்த்தி கீழே குதித்தபோது, லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.