வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வேப்பூா் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வேப்பூா் வட்டம், ஜவதிகுடி கிராமத்தில் வசித்து வருபவா் ராஜேஸ்வரி(47). இவரது கணவா் திரிசங்கு. இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு தரை தள வீட்டை பூட்டிக் கொண்டு, முதல் தளத்தில் உள்ள வீட்டில் ராஜேஸ்வரி, தனது மகனுடன் தூங்கினாா். அப்போது, திங்கள்கிழமை அதிகாலை சத்தம் கேட்டு கீழே வந்து பாா்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததாம். மேலும், பீரோவில் இருந்த 2 கிராம் தங்க நகைகள், வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com