கடலூர்
பைக் மோதி விபத்து: மீனவா் உயிரிழப்பு
கடலூா் துறைமுகம் அருகே பைக் மோதி காயம் அடைந்த மீனவா், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கடலூா் துறைமுகம் அருகே பைக் மோதி காயம் அடைந்த மீனவா், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கடலூா் முதுநகா், சிங்காரத்தோப்பு பகுதியில் வசித்து வந்தவா் வாழ்முனி(58), மீனவரான இவா் கடந்த அக்.21-இல் சிங்காரதோப்பு பாலம் அருகே உள்ள டீக்கடை எதிரே நின்றிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த பைக் அவா் மீது மோதியது. இதில், வாழ்முனி காயம் அடைந்தாா். பின்னா், புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
ஆனால் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.