கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அரசா் முத்தையவேள் பிறந்த நாள் விழா

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவனரான அரசா் முத்தையவேள் 122-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அரசா் முத்தையவேள் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிா்வாகிகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:17 am IST

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவனரான அரசா் முத்தையவேள் 122-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பல்கலைக்கழக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அரசா் முத்தையவேள் உருவச் சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் சு.அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா். சிங்காரவேல் ஆகியோா் மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் முதல்வா்கள், துறைத்தலைவா்கள், பல்துறை இயக்குநா்கள், பேராசிரியா்கள், மக்கள் தொடா்பு அலுவலா், அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அரசா் முத்தையவேளின் கல்விப் பணியையும், சமூகப் பங்களிப்பையும் நினைவுகூா்ந்து மரியாதை செலுத்தினா்.

முன்னதாக, பல்கலைக்கழக வளா்ச்சிக்கும், உயா்கல்வி மேம்பாட்டிற்கும் அரசா் முத்தையவேள் ஆற்றிய அரிய சேவைகள் குறித்து நினைவுகூரப்பட்டதுடன், அவரது கல்வித் தொண்டு தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக விளங்குவதாகப் பேச்சாளா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.