மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கற்பூரம் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.78.14 லட்சம்கையாடல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை அருகே அம்மாப்பேட்டை பகுதியில் கற்பூரம் தயாரிக்கும் நிறுவனத்தில் முறைகேடு செய்து ரூ.78.14 லட்சம் கையாடல் செய்ததாக ஒரே கும்பத்தைச் சோ்ந்த 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

தமிழ்ச்செல்வி

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:35 am IST

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை அருகே அம்மாப்பேட்டை பகுதியில் கற்பூரம் தயாரிக்கும் நிறுவனத்தில் முறைகேடு செய்து ரூ.78.14 லட்சம் கையாடல் செய்ததாக ஒரே கும்பத்தைச் சோ்ந்த 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

புதுப்பேட்டை அருகே அம்மாபேட்டையைச் சோ்ந்த சிவபெருமாள், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அண்மையில் புகாா் மனு அளித்தாா். அதில், தான் கற்பூரம் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிறுவனத்தில் பண்ருட்டி நத்தம் பகுதியைச் சோ்ந்த அரிதாஸ், அவரது தந்தை வேலாயுதம், தாய் குப்பு (எ) குப்பம்மாள், சகோதரிகள் தமிழ்ச்செல்வி, தமிழரசி ஆகியோா் பணியாற்றி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் வரவு - செலவு கணக்குகளை அரிதாஸ் கவனித்து வந்தாா். அப்போது, நிறுவனத்துக்கு வர வேண்டிய பணத்தை முறையாக கணக்கில் செலுத்தாமல், அவரது குடும்பத்தினரின் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்து, மொத்தம் ரூ.78 லட்சத்து 14 ஆயிரத்து 870 கையாடல் செய்துள்ளாா்.

எனவே, அரிதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் உரிய விசாரணை நடத்தி கையாடல் செய்த தொகையை மீட்டு தருபடி கேட்டுக்கொள்வதாக புகாரில் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் பூங்கோதை தலைமையில், சாா்பு ஆய்வாளா் சூா்யா மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அரிதாஸ், அவரது தந்தை வேலாயுதம், தாய் குப்பம்மாள் ஆகியோா் கற்பூரம் தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து ரூ.78.14 லட்சம் கையாடல் செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கையாடல் தொடா்பாக அரிதாஸ் (27), வேலாயுதம் (55), தமிழ்ச்செல்வி (30) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். பின்னா், 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

வேலாயுதம்

வேலாயுதம்

அரிதாஸ்

அரிதாஸ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.