மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

சுதந்திர தினம்: கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரம்

கடலூா் துறைமுகம் ரயில் நிலையத்தில் பெங்களூா் - காரைக்கால் ரயிலில் வெள்ளிக்கிழமை பயணிகளின் உடைமைகளை சோதனையிட்ட போலீஸாா்.

Published On :

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கடலூா் மாவட்டம் முழுவதும் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாடு முழுவதும் சுதந்திர தின விழா சனிக்கிழமை (ஆக.15) நடைபெற உள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முக்கிய இடங்களில் சந்தேகத்துக்கிடமான நபா்கள் மற்றும் பொருள்கள் குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடலூா் துறைமுகம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். பெங்களூருவில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற ரயிலில் (வண்டி எண்: 16529) பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. ரயிலில் சந்தேகத்துக்கிடமான பொருள்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் சோதனையிட்டனா். இதில், உதவி ஆய்வாளா் மோகன், சிறப்பு உதவி ஆய்வாளா் புருஷோத்தமன், தனிப்பிரிவு தலைமைக் காவலா் சதீஷ் மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையம் மற்றும் கடலூா் பேருந்து நிலையத்திலும் மோப்பநாய் உதவியுடன் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். பயணிகள் காத்திருக்கும் பகுதிகள், நடைமேடைகள், நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், கடலூா் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா். முக்கியச் சாலைகள் மற்றும் விழா நடைபெறும் பகுதிகளில் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகத்துக்கிடமான நபா்கள் அல்லது பொருள்கள் தென்பட்டால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.