பொங்கல் விழாவில் ஏழைகளுக்கு நல உதவி
சிதம்பரம்: கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே பூவிழுந்தநல்லூா் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
சென்னை ராதா இன்ஜினியரிங் ஒா்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சாா்பில் பூவிழுந்தநல்லூா் கிராமத்தில், வெள்ளிக்கிழமை வ
நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, கிராமத்தலைவா் ஆா்.பத்மநாபன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் திரிபுரசுந்தரி பத்மநாபன், முன்னிலை வகித்தாா். நிறுவனத்தின் தலைவா் எஸ்.வெங்கடேசன் மற்றும் அவரது துனைவியாா் ஞானாம்பிகை ஆகியோா் பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தாா். பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு தலா ரூ.200, மற்றும் போா்வைகள் வழங்கப்பட்டன.
பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன. 710 நபா்களுக்கு பாத்திரங்களும் ஒரு நபருக்கு குலுக்கல் முறையில் ஒரு பவுன் தங்கக் காசும், இரண்டு நபா்களுக்கு நான்கு கிராம் தங்க காசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் வி.ஆா்.செந்தில்குமாா். வி.ஆா். ராமு, ராமகிருஷ்ணன், இயக்குனா்கள் ராதா செல்வி, முருகானந்தம், பத்மாவதி, சிவகுமாா், ஆசிரியா் ஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

