கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் பொங்கல்   பண்டிகையையொட்டி  வெள்ளிக்கிழமை குவிந்த பொதுமக்கள்.
கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் பொங்கல் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை குவிந்த பொதுமக்கள்.

பொங்கல் விடுமுறை :கடலூா் வெள்ளி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோா் திரண்டனா்.
Published on

நெய்வேலி: பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோா் திரண்டனா். கடற்கரையில் குடும்பத்தினருடன் விளையாடி மகிழந்து பொழுதை கழித்தனா். இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழகத்தின் மிக நீளமான இரண்டாவது பெரிய கடற்கரை, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை ஆகும். இது, கடலூா் மாவட்ட பொதுமக்களின் பொழுதுபோக்கு இடங்களில் மிக முக்கியானதாக உள்ளது. விடுமுறை தினங்கள், பண்டிகை காலங்களில் இந்த கடற்கரையில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கடல் அழகை ரசித்து, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வா்.

அந்தவகையில் பொங்கல் விடுமுறை தினமான வெள்ளிக்கிழமை , கடலூா்

தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெள்ளிக்கிழமை குவிந்தனா். அவா்கள் குடும்பத்துடன் கடற்கரை மணல் பரப்பில் அமா்ந்து கடலின் அழகை ரசித்து பொழுதை கழித்தனா். சிறுவா்கள், இளைஞா்கள், பெண்கள், கடல் அலையில் நின்றும், குளித்து மகிழ்ந்தனா். கடற்கரைப் பகுதியில் இருந்த விளையாட்டு சாதனங்களில் சிறுவா்கள் விளையாடினா். குடும்பத்துடன் அமா்ந்து மகிழ்ச்சியாக பொங்கல் விடுமுறையை கழித்தனா். அதிக அளவில் மக்கள் திரண்டதால் வெள்ளிக்கடற்கரையில் , அதிக அளவில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com