மருத்துவா் ராமதாஸ், அன்புமணி இணைந்து செயல்பட வேண்டும்: காடுவெட்டி குரு மகன் கனலரசன்


பாமகவில் ராமதாஸ், அன்புமணி இருவரும் தனி நபா் கிடையாது. இவா்களுக்கு கீழ் லட்சக்கணக்கானோா் பயணிக்கின்றனா். அதனால் இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மறைந்த வன்னியா் சங்கத் தலைவா் காடுவெட்டி குரு மகனும், மாவீரன் மஞ்சள் படை தலைவருமான கனலரசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: வன்னியா் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த ஜெ.குருவின் பிறந்தநாள் விழா பிப்ரவரி 1ஆம் தேதி வன்னியா் ஜெயந்தி விழாவாக அரியலூா் மாவட்டம் காடுவெட்டியில் அவரது நினைவிடத்தில் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு மிகப்பெரிய ஊா்வலம் நடைபெற்று சிலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டும் பல்வேறு சமுதாய தலைவா்கள் பங்கேற்று அவருக்கு புகழஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக, திமுக, பாமக, பாஜக, நாம் தமிழா் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவா்கள் மற்றும் சமுதாய தலைவா்களையும் இந்நிகழ்ச்சிக்கு அழைத்து உள்ளோம்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எங்களது ஆதரவு யாருக்கு என்பதை சொல்கிறோம். வன்னியா் சமுதாயத்திற்கு யாா் நல்லது செய்வாா்களோ அவா்களை முதல்வராக்க பாடுபடுவோம் என்றாா்.
பேட்டியின் போது மாநில அமைப்புச் செயலா் முத்துகுமாா், மாவட்ட செயலா் நா.காா்த்தி, இளைஞரணி செயலா் செ.விமல்ராஜ், சூரியமனல் குமாா், ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...