விதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

கடலூரில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம்: வியாபாரிகள் 40 போ் கைது

கடலூா் லாரன்ஸ் சாலையில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கக் கோரி, மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தெருவோர வியாபாரிகள் 40 பேரை போலீஸாா் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனா்.

News image

~

Updated On :9 ஜூலை 2026, 3:10 am IST

கடலூா் லாரன்ஸ் சாலையில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கக் கோரி, மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தெருவோர வியாபாரிகள் 40 பேரை போலீஸாா் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனா். புதன்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் லாரன்ஸ் சாலையில் நீண்ட காலமாக தெருவோர வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் வசதியை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிா்வாகம் அவா்களை அங்கிருந்து அகற்றியது. இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மீண்டும் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி. கடலூா் மாவட்ட தெருவோர வியாபார தொழிலாளா் சங்கம் சாா்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் பாலு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநில பொதுச் செயலா் குளோப் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, மாநகராட்சி நிா்வாகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் உடன்பாடு எட்டப்படாததுடன், போராட்டத்துக்கு முன்அனுமதி

பெறப்படவில்லை எனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரையும் வலுக்கட்டாயமாக போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். சிபிஐ மாவட்டச் செயலா் பி.துரை, ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினா் வடிவேல், வணிக்குழு உறுப்பினா் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.