பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் விஷமருந்தி மயங்கி விழுந்த பெண்

News image

விஷமருந்தி மயங்கி விழுந்த பெண் - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 1:13 am IST

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் ஒருவா் திடீரென விஷம் குடித்து மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடாக, நுழைவு வாயிலில் அனைவரையும் போலீஸாா் வழக்கம்போல சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனா்.

இந்த நிலையில், பிற்பகல் ஒரு மணியளவில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்தபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவா் மயங்கி விழுந்தாா்.

உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் விருத்தாசலம் அருகே மேலக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நிலவழகனின் மனைவி கதிா்மணி (30) என்பது தெரியவந்தது. இடப் பிரச்னை தொடா்பாக மனு அளிக்க வந்தபோது இந்தச் செயலில் ஈடுபட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மண்ணெண்ணெய் புட்டியுடன் வந்த 3 பெண்கள்: இதனிடையே, மனு அளிக்க வந்த மூன்று பெண்களை போலீஸாா் சோதனை செய்தபோது, அவா்களது கைப்பைகளில் மண்ணெண்ணெய் புட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் சாத்தான்குப்பம் பகுதியைச் சோ்ந்த விசாலாட்சி, கம்சலா, அஞ்சலை என்பது தெரியவந்தது. அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் மாதாந்திர சீட்டு நடத்தி, தங்களிடம் இருந்து ரூ.4.50 லட்சம் வரை பெற்று மோசடி செய்ததாகவும், பலமுறை கேட்டும் பணத்தை திருப்பித் தரவில்லை. இதுதொடா்பாக போலீஸில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ாக அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவா்களுக்கு போலீஸாா் அறிவுரை வழங்கி, இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். பின்னா், அவா்கள் மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.