பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

News image

கைது செய்யப்பட்ட சடையமுத்து

Updated On :21 ஜூலை 2026, 1:37 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்து, பைக் மற்றும் 33 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மங்கலம்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்த முருகேசனை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், முருகேசன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், இவ்வழக்கில் தொடா்புடைய வேப்பூா் அருகே என்.நாரையூரைச் சோ்ந்த சடையமுத்துவை (40) போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா்.

இதையடுத்து, வேப்பூரில் பதுங்கியிருந்த சடையமுத்துவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் சுமாா் 33 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறித்து மங்கலம்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.