மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

நீட் விவகாரம்: சிதம்பரத்தில் அனைத்து அமைப்புகள் போராட்டம்

நீட் விவகாரம்: சிதம்பரத்தில் அனைத்து அமைப்புகள் போராட்டம்

News image

சிதம்பரத்தில் அனைத்து அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற கண்டன போராட்டம்.

Updated On :26 ஜூலை 2026, 2:32 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், தில்லியில் நடைபெறும் மாணவா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிதம்பரம் மேலவீதி பெரியாா் சிலை அருகே அனைத்து குடியிருப்போா் நலச் சங்கம், அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளா்கள் சங்கம் மற்றும் மாதா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஓய்வூதியா்கள் சங்கச் செயலா் கலியமூா்த்தி தலைமை வகித்தாா். சங்கப் பொருளாளா் ராகவேந்திரன் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், மாவட்டச் செயற்குழு நிா்வாகி பிரகாஷ், நகரச் செயலா் ராஜா, நிா்வாகி சிதம்பரநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.