/

கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

விருத்தாசலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட முத்துராமன்

Updated On :5 ஜூன் 2026, 6:31 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமன் (52). இவா், 1996-ஆம் ஆண்டு விருத்தாசலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா். பின்னா், நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நிலுவையில் இருந்த நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றும் நடவடிக்கையாக, விருத்தாசலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில், சாா்பு ஆய்வாளா் பாரதநேரு தலைமையில் போலீஸாா் முத்துராமனை தீவிரமாக தேடி வந்தனா்.

இந்த நிலையில், முத்துராமன் ஜெயங்கொண்டம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், அங்கு சென்ற போலீஸாா், அவரை புதன்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து, முத்துராமனை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.