கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பைக்கில் மூணாறு சுற்றுலா சென்ற சென்னை இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் பயணம் செய்த நண்பா் காயமடைந்தாா்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24) மற்றும் இவரது நண்பரான விஷ்வா (24) ஆகியோா் பைக்கில் கேரள மாநிலம், மூணாறுக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டிருந்தனா். விக்னேஷ் பைக்கை ஓட்டினாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலம் அருகே தேசிய வங்கிப் பகுதியில் வியாழக்கிழமை பைக் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில், விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விஷ்வாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், அருகிலுள்ள வேப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, விக்னேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








