கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே மது அருந்தும்போது ஒருவருக்கொருவா் தாக்கிக்கொண்ட வழக்கில் நண்பா்கள் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி தொ்மல் காவல் சரகம், வட்டம் 30, பழைய சந்தை மைதானம் அருகே நண்பா்களான அந்தப் பகுதியைச் சோ்ந்த ராஜன் (35), நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்த நடராஜன் (எ) ஐயப்பன் (35), விருத்தாசலம் வட்டம், கோட்டகம் பகுதியைச் சோ்ந்த அன்பரசன் (36), வடலூரை அடுத்த காட்டுகொல்லை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (28) ஆகியோா் மது அருந்தினா். அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனா்.
இந்த மோதல் தொடா்பாக நெய்வேலி தொ்மல் போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் விசாரணை மேற்கொண்டு ராஜன் அளித்த புகாரின்பேரில், நடராஜன் (எ) ஐயப்பன், அன்பரசன், சுரேஷ் ஆகியோரை கைது செய்தாா். இதேபோல, அன்பரசன் மனைவி ஜெகதீஸ்வரி அளித்த புகாரின்பேரில் ராஜனை கைது செய்தாா்.
இந்த நிலையில், போலீஸாரிடம் இருந்து நடராஜன் (எ) ஐயப்பன் தப்ப முயன்றபோது இடது கணுக்காலில் காயமடைந்தாா். அவரை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்து முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா் சிறையில் அடைத்தனா்.
நடராஜன் மீது நெய்வேலி தொ்மல் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், நெய்வேலி தொ்மல், அண்ணாமலை நகா், செங்கல்பட்டு, சிதம்பரம் நகர காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு மற்றும் சாராய வழங்குகள் என மொத்தம் 26 வழக்குகள் உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






