ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

சாலை விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :21 ஜூன் 2026, 2:07 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த இளைஞா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவா் காா்த்திகேயன்(28). இவா், கடந்த 5-ஆம் தேதி தனது பைக்கில் பெருமாத்தூரன் வீதி வழியாக வந்தாா். அப்போது, அந்த வழியாக நடந்து வந்த முதியவா் மீது மோதால் இருக்க திடீரென பிரேக் போட்டாா்.

இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்தவா் பலத்த காயம் அடைந்தாா். குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.