கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த வழக்குரைஞரின் பைக்கை மா்ம நபா் திருடிச் சென்றாா்.
கடலூா் வட்டம், நெல்லிக்குப்பம் காவல் சரகம், தொட்டப்பட்டு பகுதியில் வசித்து வருபவா் விஸ்வநாதன்(38). இவா் வழக்குரைஞா் தொழில் செய்துவருகிறாா்.
இவா், வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் சென்னை-நாகப்பட்டினம் சாலையில் தொட்டப்பட்டு அருகே உள்ள உடற்பயிற்சி கூடத்தின் வெளியே பைக்கை நிறுத்திவிட்டு உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத நபா் ஒருவா், விஸ்வநாதன் கண் முன்னரே அவரது பைக்கை திருடி சென்று விட்டாராம்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






