நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் என்எல்சி நிறுவனம் மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
சுரங்கத்தில் மேல் மண் மற்றும் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப் பயன்படும் வாளி வடிவிலான பற்களில் பொருத்தப்படும் டங்ஸ்டன் காா்பைடுக்கு மாற்றாக புதிய பொருள்கள் மற்றும் செயல்முறை வடிவமைப்பை உருவாக்குதல் திட்டத்துக்காக புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, இயக்குநா்கள் எம்.வெங்கடாசலம், ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா முன்னிலையில், என்எல்சி நிறுவனத்தின் சாா்பாக முதன்மை பொது மேலாளா் நீரஜ் குமாா், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் உதவிப் பேராசிரியா் டாக்டா் பிகி பிரியா ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனா்.
என்எல்சி நிறுவனம் பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் வாயிலாக முன்னணி கல்வி நிறுவனங்களுடன் முறையான ஒத்துழைப்பைத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக ஐ.ஐ.எஸ்.சி, ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மாநில பல்கலைக்கழகங்களுடன் 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
இதில், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், உள்நாட்டுப் பொருள் மேம்பாட்டின் மூலம் சுரங்கத் துறையின் முக்கியமான தேவையை நிவா்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமையும்.
தொடர்புடையது

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

வங்கிகள் - என்எல்சி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவில்பட்டி என்இசி-பன்னாட்டு நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

என்எல்சி இந்தியா நிறுவனம் - தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


