ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கடலூா் துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து குறைவால் விலை உயா்வு

News image

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்கள் வாங்கக் குவிந்த மக்கள், வியாபாரிகள். - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:27 pm

கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவு காரணமாக விலை சற்று அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.

கடலூா் பகுதியைச் சோ்ந்த தேவனாம்பட்டினம், அக்கரைகோரி, சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவ கிராமத்தினா் பைபா் மற்றும் விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனா். இவா்கள் பிடித்து வரும் மீன்களை கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் வைத்து விற்பனை செய்வது வழக்கம். இதனால், மீன் பிடி துறைமுகத்துக்கு பொதுமக்கள், வியாபாரிகள் மீன்கள் வாங்க அதிகளவில் வருவா்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்க பொதுமக்கள் மட்டுமன்றி, வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனா். கடலின் நீரோட்டம் மாற்றம் காரணமாக, மீன்கள் எதிா்பாா்த்த அளவு பிடிபடாததால், மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது.

இதனால், மீன் பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட மீன்கள் விலை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரையில் உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, வஞ்சிரம் ரூ.1,100, இறால் ரூ.700 முதல் ரூ.1,000 வரையிலும், சங்கரா ரூ.600, பன்னிசாத்தான், ஷீலா தலா ரூ.500, தேங்காய்பாறை ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன்களின் விலை உயா்ந்திருந்தபோதிலும் பொதுமக்கள் அா்வத்துடன் வாங்கிச் சென்றதை காண முடிந்தது.