தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சித்தேரியில் புதிய நாடக மேடை: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

News image
ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ- கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், புவனகிரி ஊராட்சி ஒன்றியம், சித்தேரி ஊராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புவனகிரி கிழக்கு ஒன்றியச் செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் உமா மகேஸ்வரன், நகர பேரவைச் செயலா் ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலா் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ பங்கேற்று, புதிய நாடக மேடையை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் அருளழகன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் சசிசெல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரவிச்சந்திரன், நகர மாணவரணிச் செயலா் ராஜேஸ்வரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.