நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ராஜஸ்தானைச் சோ்ந்தவா் கைது

News image
- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 5:33 pm

தினமணி செய்திச் சேவை

காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவரை பண்ருட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி டி.எஸ்.பி. ராஜா மேற்பாா்வையில், ஆய்வாளா் பாஸ்கரன், உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் பாரதி நகா் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 215 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.07 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸாரைக் கண்டதும் காா் ஓட்டுநா் ராஜஸ்தானைச் சோ்ந்த லீலாராம் இறங்கி ஓடிவிட்டாா். காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலம், ஜாலோா் மாவட்டம், ஜெயின்புரா பகுதியைச் சோ்ந்த ரூபாராமை போலீஸாா் கைது செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக காா் உரிமையாளரான கடலூா் கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்த தினேஷ் உள்ளிட்ட 3 போ் மீது பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பண்ருட்டி காவல் நிலையம் வந்து புகையிலைப் பொருள்களை பிடித்த போலீஸாரைப் பாராட்டினாா்.