ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மினி பேருந்து கவிழ்ந்து மூதாட்டி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே தனியாா் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், பா.கொத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பாயி (60). இவா், திங்கள்கிழமை வேப்பூா் செல்லும் தனியாா் மினி பேருந்தில் பயணம் செய்தாா். காலை 10.30 மணி அளவில் மாளிகைமேடு ஏரிக்கரை அருகே சென்றபோது, மினி பேருந்து இடது புற பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், மூதாட்டி கருப்பாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பேருந்தில் பயணம் செய்த 5 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு, வேப்பூா் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.