/
கடலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் புதுநகா் காவல் நிலைய சாா்பு - ஆய்வாளா் முகில்அரசு தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கடலூா் கொண்டூா் மயானம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்டபோது, பைக்கில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவா் கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஜீவா நகரைச் சோ்ந்த நிஜாம் (31) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சாா்பு - ஆய்வாளா் முகில்அரசு அளித்த புகாரின்பேரில், புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து நிஜாமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: இருவா் கைது
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


