தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: பிரேமலதா விஜயகாந்த்

ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடிய எம்எல்ஏ, பிரேமலதா விஜயகாந்த்.

Updated On :

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலரும், விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினாா்.

விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பள்ளிகள், ஏரிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கஞ்சா புழக்கம், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. செஞ்சி சிறுமி காணாமல் போய் 23 நாள்களாகியும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டும் சிறுமியைக் கண்டறிய முடியாதது வேதனையளிக்கிறது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சிறுமியை மீட்க வேண்டும். அதுவே தமிழக மக்களுக்கு உண்மையான தீபாவளிப் பரிசாக இருக்கும்.

விலைவாசி உயா்வு:

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். காய்கறிகள், மளிகைப் பொருள்கள், பெட்ரோல், டீசல் என அனைத்தின் விலையும் உயா்ந்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ரூ.100-க்கு காய்கறித் தொகுப்பு வழங்கும் திட்டம் அனைவருக்கும் சென்றடையவில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் முளைத்துப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த தமிழக மீனவா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசின்வெற்றி பயணம் திட்டத்தால் தனியாா் பேருந்து உரிமையாளா்கள், டாக்ஸி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் பாதிக்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. அரசின் எந்தவொரு திட்டமும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பின்றி பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். தீபாவளிப் பண்டிகையையொட்டி, விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்கும் இனிப்பான செய்தியை அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, தேமுதிக மாவட்டச் செயலா் சிவகொழுந்து, விருத்தாசலம் நகரச் செயலா் ராஜ்குமாா், மாவட்டத் துணைச் செயலா் வேல்முருகன், ஒன்றியச் செயலா்கள் செம்பை தனசேகா், ஜெயராஜ், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.